Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
Colombo City Centre இன் சர்வதேச ஷொப்பிங் மோல் பொதுமக்களின் பாவனைக்காக 2018 மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது சர்வதேச தரத்திலான ஷோப்பிங் மோலான இது பேய்ரே ஏரியை முகம் பார்த்து கொழும்பின் மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. கொழும்பு மக்களின் வாழ்வோடு நவீனத்துவத்தை பிணைந்து புத்தாக்க மாற்றத்தைத் தந்திடும் புதிய அனுபவத்தை இதன்மூலம் சகல இலங்கையர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
Colombo City Centre கூட்டுத் திட்டத்தின் உள்நாட்டு பங்காளராகிய அபான்ஸ் குழுமத்தின் தலைவி திருமதி. அபான் பெஸ்டோன்ஜி, இவ்வாறானதொரு கருத்தத் தெரிவித்தார். “இலங்கையர்களுக்கு தத்தம் குடும்பம் சகிதம் வருகைத் தந்து வினோதமாகவும் மகிழ்ச்சியாகவும் பொழுதை கழித்திடக்கூடிய ஒரு சர்வதேச தரத்திலான இடத்தின் குறையை Colombo City Centre கண்டிப்பாக பூர்த்திசெய்யும். மேலும், சர்வதேச தரத்திலான விற்பனை நாமங்களை உள்ளடக்கிய கடைத்தொகுதிகள், அதிசொகுசு வாய்ந்த சர்வதேச உணவகங்கள், பிரம்மாண்டமான 6 திரைகளைக் கொண்ட சினிமா திரையரங்கம் போன்ற நவீன வசதிகளை உள்ளடக்கிய Colombo City Centre இலங்கையர்களுக்கு மனம் நீங்கா அனுபவத்தை தரக்கூடிய மிகச்சிறந்த இடமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதே எனது நம்பிக்கையாகும்” என அபான் பெஸ்டோன்ஜி தெரிவித்தார்.
நாளாந்தம் காலை 10.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை Colombo City Centre ஷோப்பிங் மோல் திறந்திருப்பதோடு, இங்கு பன்முகத்தன்மைவாய்ந்த உணவுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் மூலம் அதிகபட்ச மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
Apple, ALDO, Nike, Spa Ceylon உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பல விற்பனை நாமங்கள் கொண்ட கடைத்தொகுதிகளுடன் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப சுவைத்திடக்கூடிய சந்தர்ப்பம் இங்கு உண்டு.
சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவகம் மற்றும் Three Star Michelin சமையல் வல்லுநரை கொண்ட அதிசொகுசு Desert Bar மற்றும் Tropical Island உணவகம் இங்கு உண்டு. இலங்கையில் இலங்கையர்களுக்கு முதல் முறையாக அனுபவிக்கக்கூடிய 6 திரைகளைக் கொண்ட அதிசொகுசு மல்டிபிளெக்ஸ் திரையரங்கத்தின் மூலம் நாளாந்தம் 25 காட்சிகள் திரையிடப்படும்.
அதேபோல் இலங்கையின் சினிமா ரசிகர்கள் இதற்கு முன்னர் இலங்கையில் ஒருபோதும் அனுபவித்திராத 4k Projection தொழில்நுட்பத்தை இது வழங்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago