Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
E.B. Creasy & Co., PLC இன் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவான E.B. Creasy Solar, இலங்கையில் LONGi தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற முகவராக நியமிக்கப்பட்டுள்ளது. சோலர் தொழினுட்பத்தில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாக திகழும் LONGi உடனான இந்தப் பங்காண்மையினூடாக, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல் எய்தப்பட்டுள்ளதுடன், நிலைபேறான எதிர்காலத்துக்கான வழிகோலப்பட்டுள்ளது. LONGi உடன் உத்தியோக விற்பனை பங்காளராக இணைந்துள்ள E.B. Creasy Solar, கொழும்பு மரீனோ பீச் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் சோலர் பனெல்களை அறிமுகம் செய்திருந்தது.
இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு தற்போது உயர் வினைத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்காக அறியப்படும் LONGi இன் புகழ்பெற்ற சோலர் பனெல்களை கொள்வனவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால பங்காண்மைகளினூடாக, ஒப்பற்ற தரத்தில் நவீன தொழினுட்பத்தை ஏற்படுத்திக் கொடு்பபதில் E.B. Creasy Solar இன் அர்ப்பணிப்பு இந்தப் பங்காண்மையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு வலுவூட்டி, நிலைபேறாண்மையை ஊக்குவித்து மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு இலங்கையை மாற்றும் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் E.B. Creasy Solar முன்னிலையில் திகழ்கின்றது.
E.B. Creasy & Co. PLC இன் துணை நிறுவனமாக E.B. Creasy Solar, 20 வருடங்களுக்கு மேலாக, தொடர்ச்சியாக சூரியனின் வலுவை குடும்பங்கள், வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வருவதில் பங்களிப்பு வழங்கியுள்ளது. 1878 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, E.B. Creasy & Co தமது சகல செயற்பாடுகளிலும் ஒழுக்கம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதியாகப் பேணுகின்றது. புதுப்பிக்கத்தக்க வலுவில் சிறந்த செயன்முறைகளை பின்பற்றி, 25 வருட கால உத்தரவாதத்தை வழங்குவதுடன், E.B. Creasy Solar நாட்டின் பசுமையான எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. UNDP மற்றும் வேர்ள்ட் விஷன் லங்கா ஆகிய சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளுடன் கைகோர்த்து, சமூகங்களில் விடிவை ஏற்படுத்தும் வியாபாரத்தில் E.B. Creasy Solar ஈடுபட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மேம்படும் நிலையில், காபன் நடுநிலை, வினைத்திறன் மற்றும் சூழல்-அக்கறை என்பவற்றினூடாக E.B Creasy இனால் சூரியனைப் போன்று நிலையான செயற்பாடுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago