Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா தனது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக விசேட மூவி டேடா பக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. இப்பக்கேஜ்களை ரூ. 119 மற்றும் ரூ. 179 ரீசார்ஜ் காட்கள் மூலம் செயற்படுத்திக்கொள்ள முடியும். இந்த சேவையைப் பயன்படுத்தி எயார்டெல் மூவி பொக்ஸ் ஊடாக அன்ட்ரொய்ட் சாதனங்களைக் கொண்டு திரைப்படங்களை இலவசமாக பார்த்து மகிழலாம்.
எயார்டெல் மூவி பொக்ஸ் ஆனது வெள்ளிதிரையின் பொற்காலம் முதல் தற்காலம் வரையான 500க்கு மேற்பட்ட திரைப்படங்களை உயர் தெளிவுடன் உள்ளடக்கி உள்ளது. இதனை Google Play- store ஊடாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் எயார்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் அபிமான திரைப்படங்களை போகும் வழியிலே கண்டுகளிக்கலாம்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் app க்கு வாராந்தம் முன்பதிவு கட்டணமாக 70 ரூபாயை செலுத்த வேண்டும். ஆனால் எயார்டெல் முற்கொடுப்பனவு வாடிக்கை யாளர்கள் இச்சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 119 ரூபாய் மற்றும் 179 ரூபாய் டேட்டா கார்ட்களை செயற்படுத்தி எயார்டெல் மூவி பொக்ஸை 7 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
“வாடிக்கையாளர்களின் நடத்தை அடிக்கடி மாறிவருவதுடன் மொபைல் ஊடாக போகும் வழியிலே திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் உருவாகி வருகிறது. இதனால் புத்தம் புதிய ஆர்வத்தை தூண்டும் உயர்தரத்திலான சேவைகளை வழங்கவேண்டிய தேவை உள்ளது. எனவே, அவர்கள் கூறும் முன்னமே அவர்கள் உள்ளக்கிடக்கைகளை நன்கு அறிந்த நாம் இலங்கையில் முதன்முறையாக எயார்டெல் டேட்டாவை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக திரைப்படங்களை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வழங்க முன்வந்துளோம்” என எயார்டெல் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிர்வாகப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே தெரிவித்தார்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago