J.A. George / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதன்முறையாக, மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இலகுவாக ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதற்கான டிஜிட்டல் கருவியை பொதுமக்கள் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீடு என்று பெயரிடப்பட்ட இக்கருவியில், இலட்சிய கோரிக்கைகள் அல்லது கணிப்புகளுக்கு பதிலாக, குறிப்பிடத்தக்க செயல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன 1,500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இதில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இத்தளம் தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீடு எனும் அம்சத்தைக் கொண்டுள்ளது, இது 15 கருப்பொருள் பகுதிகளின் கீழ் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வாக்குறுதிகளை ஒன்றுடன் ஒன்று இணையாக ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பை பயனர்களுக்கு வழங்குகிறது.
இங்கு "தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீட்டு செயல்பாடு " என்ற பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது!
இது பயனர்களுக்கு தங்கள் கனவு விஞ்ஞாபன அறிக்கையை வடிவமைக்கவும், அவர்களின் விருப்பத்தேர்வுகள் வேட்பாளர்களின் குறிப்பிட்ட செயல்திறனுள்ள வாக்குறுதிகளுடன் எவ்வளவு நெருக்கமாக ஒத்துப்போகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவும் முடியும்.
உலகளாவிய ரீதியில் இப்பிரத்தியேக முயற்சி வெரிட்டே ரிசர்ச்சின் Manthri.lk தளத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை, https://manthri.lk/en/presidential-election-manifesto-2024, தளத்தின் ஊடாக அல்லது கீழே உள்ள QR குறியீடு மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

37 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago