2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரைக்கு SDB வங்கி உதவி

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய முயற்சியாளர்களுக்கு என்றும் உதவிக்கரமாகவுள்ள SDB வங்கி, கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரையில உயிர் வாயு கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அனுசரணை வழங்கியிருந்தது. 

வருடத்தின் யாத்திரை காலத்தில் கதிர்காமத்துக்கு விஜயம் செய்யும் சுமார் 1,000க்கும் அதிகமான பக்தர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் இந்தக் கட்டமைப்பை நிறுவ SDB வங்கி நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த உயிர் வாயு கட்டமைப்பு விகாரையின் மகா தேரருக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மொனராகலை மாவட்ட செயலாளர் திருமதி. டி.எஸ். பத்மகுலசூரிய, SDB வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி சமீர டி லியனகே, SDB வங்கியின் கூட்டுறவு பிரிவின் பிரதானி பி.டி.தம்மிக, வங்கியின் ஊவா பிராந்திய முகாமையாளர் கே.பி.ரத்நாயக்க மற்றும் இதர விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.  

புதிய உயிர் வாயு கட்டமைப்பின் நிறுவுகையுடன், ஸ்ரீ அபினவராம விகாரையின் தினசரி வலுத் தேவைகளின் செலவை சிறிதளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைத்துக் கொள்ள முடியும்.  

நுண், சிறு மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகள் துறையின் அபிவிருத்திக்கு முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றும் வங்கியாக அமைந்துள்ள SDB வங்கி, கிராமிய மட்டத்தில் காணப்படும் தொழில்முயற்சியாளர்கள் பின்தொடர்வதற்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

சூழலுக்கு நட்பான வலுத் தீர்வுகளை ஊக்குவிப்பதனூடாக நுண், சிறு மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளின் நிலைபேறாண்மை மற்றும் இலாபகரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்பதில் வங்கி நம்பிக்கை கொண்டுள்ளதுடன், மாசற்ற சூழலை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கவும் முடிகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X