Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்துடன் ஒரு வருட நிலையான வைப்புகளுக்கு உயர் வட்டி வீதத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த காகில்ஸ் வங்கி, தற்போது ஐந்து வருட நிலையான வைப்புகளுக்கும் கவர்ச்சியான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்து வருட நிலையான வைப்புக்களுக்கு 17% (13.09% வருடாந்த வீதம்) என்ற கவர்ச்சியான வட்டி வீதத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் உயர்ந்த வட்டியை உறுதிப்படுத்தியவாறு, ஒரு வருட நிலையான வைப்புகளுக்கு 12.75% என்ற வட்டி வீதத்தையும், 6 மாத கால நிலையான வைப்புகளுக்கு 12% (12.36% வருடாந்த வீதம்) என்ற வட்டி வீதத்தையும் வங்கி வழங்கி வருகின்றது.
“ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சாமர்த்தியமான முதலீடுகளின் மூலமாக காலப்போக்கில் சிறப்பான வட்டியை ஈட்டிக் கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கி, அவர்களது நிதியியல் எதிர்காலத்தை கட்டிக்காப்பதற்கு, சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். டிஜிட்டல், மொபைல் ஆகியன எமது மரபணுவாகவே மாறியுள்ளதுடன், தற்காலத்து வாடிக்கையாளர்களின் வாழ்வை இலகுபடுத்துவதற்காக தொடர்ச்சியாக டிஜிட்டல் மூலோபாயங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது சுப்பர் மார்க்கெட் வங்கிச்சேவை எண்ணக்கருவானது வாடிக்கையாளர்கள் தமக்கு அருகாமையிலுள்ள காகில்ஸ் பூட் சிட்டி விற்பனை மய்யத்தின் ஊடாகத் தமது கணக்கின் கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிப்பதுடன், இது வாடிக்கையாளர்கள் எம்மை அடைந்து கொள்ளும் வழிமுறையை பாரியளவில் அதிகரிக்கச் செய்துள்ளது. எமது இணைய, மொபைல் வங்கிச்சேவை தளமேடைகள் வாடிக்கையாளர்கள் எமது வங்கிக் கிளைக்கு வருகை தரும் சிரமத்தைப் போக்கி, இணையத்தின் மூலமாக நிதியை மாற்றம் செய்து, தமது நிலையான வைப்புகளை ஆரம்பிக்க முடிகின்றது” என்று கார்கில்ஸ் வங்கியின் சில்லறை வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியான புத்திக பெரேரா குறிப்பிட்டார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago