Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் 9ஆவது ஒன்றுகூடல் நிகழ்ச்சி, ‘2020 ஐயும் தாண்டிச் சென்ற ஆயுள் காப்புறுதி ஆலோசகர்’ எனும் தொனிப்பொருளில் அண்மையில் இடம்பெற்றது. இது NAFLIA 2018 எனவும் அழைக்கப்படுகின்றது. நிகழ்வின் சகல அம்சங்களின் போதும் குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆயுள் காப்புறுதி ஆலோசகரின் செயற்பாட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் தரவு உயர்வுகள் பற்றி அங்கு எடுத்துரைக்கப்பட்டது.
கொழும்பு ஷங்கிரி-லா ஹொட்டலில் கடந்த செப்டம்பர் 03ஆம் திகதி இடம்பெற்ற NAFLIA நிகழ்வு, இலங்கை ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் மிக முக்கியமான ஒரு வைபவமாகும். இந்த வைபவம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முக்கிய ஏற்பாட்டாளராக இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஒன்றுகூடல் செயற்படுகிறது. நாட்டின் ஆயுள் காப்புறுதித் துறை வளர்ச்சியை இது பெரிதும் எதிர்பார்க்கிறது.
இவ்வருட NAFLIA கலந்துரையாடலின் தலைப்பு ‘MDRT அனுபவப் பிரிவு’ ஆகக் காணப்பட்டது. ஒரு மில்லியன் டொலர் ரவுன் டேபளுக்கு தகுதி பெற்ற அங்கத்தவர்களை இது கொண்டிருந்தது. AIA இன்ஷுவரன்ஸ் பிஎல்சி யின் பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தலைவர் சுமேந்திர ஜயராம் இதனை முன்னடத்தியவராகச் செயற்பட்டார். இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் நிதிசார் தொழில் வல்லுநர்களின் ஒன்றுகூடலான MDRT யின் அங்கத்தவர்களாக இருந்தனர்.
MDRT என்பது, உலகின் 72 நாடுகளின் 500க்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள், 66,000க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நிறுவனமாகும். இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களில் MDRTஇன் பெறுமதி MDRT கூட்டங்களின் மூலம் கிடைக்கும் அனுபவம் மற்றும் அறிவு, MDRTஇன் முக்கிய பாடமான ஒரு நபரின் வாழ்வில் சமநிலையை ஏற்படுத்துதல் மற்றும் MDRTஇல் இணைந்து கொள்வதற்காக அதிகளவு காப்புறுதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் இங்கு முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.
2017ஆம் ஆண்டின் காப்புறுதி மாதத்துக்கான விருது வழங்கும் வைபவம் இந்த நிகழ்வின் இறுதி அம்சமாகக் காணப்பட்டது. செலிங்கோ லைஃவ் இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஏ.எஸ்.பெரேரா அதிகூடிய காப்புறுதிகளை விற்பனை செய்து அதிகபட்ச கட்டுப்பணத்தை அடைந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
32 minute ago