Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, புலத்கொஹுபிட்டி - கேகாலை வீதியில் தனது புதிய ATM இயந்திரத்தை அண்மையில் திறந்து வைத்தது. விசேட உயர்தர இறப்பர் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான அசோசியேட்டட் ஸ்பெஷாலிட்டி இறப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின், உந்துகொடையிலுள்ள யடிதேரிய இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில், வாடிக்கையாளர்களுக்கு வசதியான விதத்தில் ATM இயந்திரம் அமைந்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு திறக்கப்பட்ட இந்த ATM கிராமப்புற சமூகத்தினருக்கும், அந்த பகுதிக்குள் வசிக்கும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கும் நேரடியான சேவையை வழங்குகிறது, மேலும், எந்த நேரத்திலும் பணத்தைத் திரும்பப் பெற விரும்புவோருக்கு பணத்தை அணுகுவது எளிதாக அமையும்.
அதிகரித்துவரும் வாடிக்கையாளர் தேவைக்குப் பதிலளிக்கும் வகையில், செலான் வங்கி தங்கள் ATM வலையமைப்பை நாடு முழுவதும் விரிவாக்கி, அவர்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago