2024 மே 04, சனிக்கிழமை

கொழும்பு துறைமுக நகரத்தில் ‘Bairaha Chicken Café’ உணவகம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 22 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி, தனது ‘Bairaha Chicken Café உணவகத்தை, இலக்கம். 26, பீச் பிளாசா, துறைமுக நகரம், கொழும்பு 01 என்ற முகவரியில் திறந்து வைத்துள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் அனைவரின் சுவையரும்புகளையும் திருப்திப்படுத்துவதில் நம்பிக்கையை வென்றெடுத்து, அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற வர்த்தகநாமம் என்ற சிறப்புடன், தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை Bairaha Chicken Café திறந்திருக்கும். பெருமளவில் அபிமானத்தைச் சம்பாதித்துள்ள பைரஹா சிக்கன் தயாரிப்புகளை பயன்படுத்தி, இலங்கையில் சமையலின் சிறப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அக்கறையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பு துறைமுக நகரத்தின் நவீன போக்குடனான உணவகங்களைக் கொண்ட அமைவிடத்தில் பல்வேறுபட்ட சுவையான உணவு வகைகளை இது வழங்கும்.

இதனை திறந்து வைப்பது குறித்து பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சியின் தலைவர் றியாஸ் மிஹுலர் கருத்துத் தெரிவிக்கையில்: 'இலங்கையில் நீண்டகாலமாக நிலைபெற்றுள்ள மிகப் பெரிய கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருப்பதால், கோழி இறைச்சி சார்ந்த பொருட்களை விரிவுபடுத்துவதற்கான எமது நோக்கமானது கோழி இறைச்சி சார்ந்த பொருட்களை வழங்குவதுடன் மற்றும் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, பண்ணையிலிருந்து உணவுத்தட்டு வரை என்ற கோட்பாட்டுக்கு செயலாக்கம் அளிக்கும் வகையில், கடற்கரை சூழல் பின்னணியைக் கொண்ட கொழும்பு துறைமுக நகரத்தில் அமைந்துள்ள Bairaha Chicken Café இல் உள்ளவர்களும், விருந்தினர்களும் பைரஹா கோழி இறைச்சியின் உண்மையான சுவையை அனுபவிக்க முடியும்,' என்று குறிப்பிட்டார்.

புகழ்பெற்ற சமையல் வல்லுனரான சுனில் எதிரிசிங்க உள்ளிட்ட தொழில்முறை சமையல் கலைஞர்கள் அணியால் இந்த உணவகத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த உணவகம் Starters முதல் Rice தெரிவுகள் மற்றும் Buns மற்றும் Burgers> Add-Ons> Kids Combos மற்றும் பான வகைகள் போன்ற பல்வேறு வகையான நாவின் சுவையரும்புக்களைத் தூண்டும் உணவு வகைகளை வழங்குகிறது. பைரஹாவின் சமீபத்திய ‘WOW-B’ வரிசையும் இந்த உணவகத்தில் கிடைக்கப்பெறுவதுடன், பைரஹாவின் தனித்துவமான drumlets மற்றும் chicken strips உட்பட பலவிதமான உணவுகளை அனைத்தும் புதிதாக சமைக்கப்பட்டு, நேர்த்தியாக சுவையூட்டப்பட்டு வழங்கப்படுகின்றன.

திறப்பு விழாவில் கருத்து தெரிவித்த பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி முகாமைத்துவப் பணிப்பாளர் யாகூத் நளீம்: 'புத்தம்புதிய, சுவையான மற்றும் மகிழக்கூடிய உணவை தனித்துவ சூழலில் தயாரிக்க, ஆரோக்கியமான கோழி இறைச்சிப் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதே எமது அணுகுமுறையாகும். வினைத்திறன் மற்றும் நேர்த்தியில் கவனம் செலுத்துவதற்கு எமது நிபுணத்துவ அணி நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. Bairaha Chicken Café இல் கிடைக்கும் சுவை மற்றும் உணவு வகைகளை அனைவரும் அனுபவிக்கும் வகையில், தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்க நாம் முயற்சி செய்கிறோம்,' என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .