Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது இறப்பர் மரங்களில் இருந்து பெறப்பட்ட வெண்ணிற மரப்பால் டயராக மாறும் விதத்தை இறப்பர் செய்கையாளர்கள் நேரடியாக பார்வையிட்டிருந்தனர். அதி உயர் தொழில்நுட்பத்தில், நவீன இயந்திரங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடு உலக சந்தைக்குத் தேவையான முடிவுப் பொருளாக மாறுவதைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர்.
இலங்கைக்குத் தேவையான வாகன டயர்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதியை உற்பத்தி செய்யும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் களனியிலுள்ள தனது விரிவான உற்பத்தி தொகுதிக்கு இறப்பர் செய்கையாளர்கள் நேரடியாக விஜயம் செய்து உற்பத்தி செயற்பாடுகளைப் பார்வையிடும் வகையில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகின்றது. உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு தேவையான அதி செயற்திறன் மிக்க டயர்களை உற்பத்தி செய்யும் உள்ளக செயற்பாட்டு பொறிமுறையை பார்வையிடும் வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறகின்றது.
பாதுக்க, ஹொரணை, அவிஸ்ஸாவலை, எஹலியகொட, இரத்தினபுரி, அக்குரஸ்ஸ, கேகாலை, யட்டியாந்தொட்டை, கோணகல்தெனிய, றுவன்வெல்ல ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 பேர் கொண்ட முதலாவது குழு இறப்பர் செய்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சியெட் களனி தொழில்சாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இயற்கை இறப்பர் உற்பத்தி தொடர்பான விரிவான விளக்கம், இறப்பர் தரம் தொடர்பாக நடத்தப்படும் கண்டிப்பான பரிசோதனைகள், விலைமதிப்பு மிக்க மூலப் பொருளை களஞ்சியப் படுத்தி வைப்பதில் பேணப்படும் தீவிர கவனம், கையிருப்பு முகாமைத்துவத்தில் பேணப்படும் முதலில் வருவது முதலில் வெளியெறுவது (FIFO) பற்றிய நடைமுறை மற்றும் ஆரம்பம் முதல் உறபத்தி முடிவு வரையான முழு செயற்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
அதி நவீன வசதிகள் கொண்ட உற்பத்தி வளாகத்தில் தர சோதனை செயற்பாடுகள் பற்றி வழங்கப்பட்ட விரிவான விளக்கம் உயர் தரம் மிக்க இயற்கை இறப்பர் விநியோகத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. உற்பத்தியில் இயற்கை இறப்பரின் பாவனை பற்றிய விரிவான விளக்கம், டயர் உற்பத்தியில் அதன் தாக்கம் பற்றிய விளக்கங்கள், தாங்கள் இறப்பர் பால் எடுக்கின்ற போது விடுகின்ற ஒரு சிறு தவறு கூட எந்தளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவர்களை விழிப்படைய செய்தது.
இந்தப் புதிய முயற்சி பற்றி கருத்து வெளியிட்ட சியெட் களனி ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி ' நாம் எமது இயற்கை இறப்பர் தேவையில் 100 வீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே கொள்வனவு செய்கின்றோம். எனவே எமது வெற்றி செய்கையாளர்களுக்கும் முக்கியமானதாகும். இந்த விடயம் எமது உறவுகளை வலுப்படுத்தும் செயற்பாட்டில் ஆற்றல் மிக்க வகையில் தொடர்பாடலுக்கு உற்படுத்தப்படுகின்றது. இந்த விடயத்தில் இறப்பர் செய்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் காட்டிய ஆர்வத்தால் நாம் உற்சாகம் அடைந்துள்ளோம். மேலும் ஒட்டு மொத்த விநியோக செயற்பாட்டிலும் தரம் பேணப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் விழிப்படைந்துள்ளமையும் மகிழ்ச்சி அளிக்கின்றது' என்றார்.
சியெட் நிறுவனம் இந்த விஜயத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முகாமைத்துவப் பணிப்பாளர் தத்லானி தலைமையிலான சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவும் பணிப்பாளர் இராஜ் பெர்ணான்டோவும் அவர்களை வரவேற்றனர்.
23 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
57 minute ago
1 hours ago