Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 12 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடபகுதி வாடிக்கையாளர்களுக்கான தனது அர்ப்பணத்தை கொமர்ஷல் வங்கி மீண்டும் ஒரு தடவை உறுதி செய்துள்ளது. நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு நிதி செயற்பாடுகள் மற்றும் தொழில்முயற்சி ஆற்றல் அபிவிருத்தி என்பன தொடர்பான ஒரு செயலமர்வு அண்மையில் பருத்தி துறையில் இடம்பெற்றது.
இவ்வாறான தொடர் அறிவூட்டல் செயல் திட்டங்கள் நாடு முழுவதும் வங்கியால் நடத்தப்பட்டு வருகின்றன. வட பகுதிக்கான இந்த நிகழ்வை வங்கியின் நெல்லியடி கிளை மற்றும் அச்சுவேலி கிளையில் உள்ள வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவு (AMFU) என்பன எற்பாடு செய்திருந்தன. 138 நுண் தொழில்முயற்சியாளர்கள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்.
நிதி செயற்பாடுகள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பற்றிய விளக்கவுரை இங்கு பிரதான இடம் பிடித்தது. இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. ரஜனி விஜயாலன் இந்த விரிவுரையை நிகழ்த்தினார். மீன்பிடி துறையின் புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளர் பி. ரமேஷ் கண்ணா விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்த துறை சார் பெண்கள் பலரும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான இத்தகைய செயல் அமர்வுகளை வங்கி ஏற்கனவே நாரம்மல, காலி, மொனராகலை, வெள்ளவாய, பதுளை, பசறை, பண்டாரவலை, வெலிமடை, வெலிகம, கொக்கலை, கராப்பிட்டிய, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா, ஹிங்குராக்கொடை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஏற்கனவே அண்மைக் காலங்களில் நடத்தியுள்ளது.
வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதி சேவைப் பிரிவுகள் இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவலை, வெள்ளவாய, ஹிங்குராக்கொட, கலேவல, அச்சுவேலி, வவுனியா மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. புதிய வர்த்தக முயற்சிகளைத் தொடங்க அல்லது இருக்கின்ற வர்த்தகத்தை விஸ்தரிக்க உதவி தேவைப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு இந்தப் பிரிவுகள் உதவி வருகின்றன. தமது வர்த்தகத்தை எவ்வாறு விருத்தி செய்வது அல்லது எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பன போன்ற விடயங்களிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பருத்தித்துறை சுபர் மெடம் அரங்கில் செயலமர்வு இடம்பெறுவதைப் படத்தில் காணலாம்.
33 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago