2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நிதி நிறுவனங்கள் துறையில் முன்னோடியாக திகழும் CDB

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

1995ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது நாட்டின் நிதிச்சேவைகள் துறையில் முன்னோடியாக தம்மை நிலைப்படுத்திக் கொள்வதிலும், நாடுமுழுவதும் நிறுவன அணுகல் முறையை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்ப ஆதரவுடன் கவர்ச்சிகரமான 60 கிளைகளை கொண்டிருப்பதிலும் கடந்த இருபது ஆண்டுகால பயணத்தில் வல்லமைமிக்க மற்றும் மறக்கமுடியாத மைல்கல்லை கொண்டுள்ளது. இதுவொரு  மைல்கல்கள், சாதனைகள் மற்றும் வெற்றிகரமான முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு பயணமாக அமைந்திருந்தது.

CDB மூலம் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கூட்டாண்மை தலைமை அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வாடிக்கையாளர் கௌரவிப்பு திட்டத்தில் கலந்துகொண்ட மாபெரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலந்துரையாடிய முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், '20 ஆண்டுகளுக்கு முன்பு இத்துறையில் நாம் மிகச்சிறிய நிறுவனமாகவே இருந்த போதிலும், எமது பலத்தின் மீது கட்டியெழுப்பிய கருத்தாக்கம் மற்றும் செயல்திட்டத்தை கொண்டிருந்தமையால் அடையாளம் காணப்பட்ட எதிர்கால வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தி இலங்கையின் மிகச்சிறந்த வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மத்தியில் நாம் வல்லமை மிக்க பிரசன்னத்தை நிலைநாட்டியுள்ளோம்' என்றார். 'CDB நிறுவனத்தின் இப் புதிய கூட்டாண்மை தலைமை அலுவலகமானது இந்த நிறுவனத்தின் முற்போக்கான வணிக மற்றும் வர்த்தகநாம உத்தியை எதிரொலிப்பதற்கான மூலோபாயங்களை நிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.

CDB இன் 20ஆவது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு இணையாக நீண்டகால வாடிக்கையாளர்களை பாராட்டும் வகையில் CDB இன் கிளை வலையமைப்புகளை உள்ளடக்கிய வகையில் முக்கிய நகரங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. CDB நிறுவனத்துடன் மிக நீண்டகாலமாக இணைந்திருந்த பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு திரையரங்குகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான விடுமுறை பக்கேஜுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளடங்கலாக ஏனைய அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. 

இந் நிறுவனத்தின் முயற்சியாண்மை, புத்தாக்கம் மற்றும் பங்கு உரிமையாளர்களின் வாழ்க்கைத்தரத்தின் உயர்வு போன்வற்றின் மீதான அதன் பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றன CDB இன் இரு தசாப்த கால பயணத்;தை உணர்த்தி நிற்கிறது. CDB நிறுவனம் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் வணிக மாதிரியில், பிரமிட் சந்தைகளின் தளத்தை அடிப்படையாக கொண்டு நிதி அணுகல் செயற்பாடுகளில் கிராமிய மற்றும் நகர பொருளாதாரத்திற்கு கடனளிப்புகளை வழங்கி வருகிறது. 

மரியாதைக்குரிய பொறுப்புணர்வு மிக்க கூட்டாண்மை பிரஜை எனும் அடையாளம் அதன் மிகப் பெறுமதி வாய்ந்த சொத்து என்பதை CDB உறுதியாக நம்புகிறது. CDB இனால் EPS என வகைப்படுத்தப்பட்டுள்ள மானிட உணர்வுகள், மானிட பேரார்வம் மற்றும் மானிட ஆர்வம் ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள முற்றுமுழுதாக மக்களால் இயக்கப்படும் இந் நிறுவனத்தின் கடந்த இரு தசாப்தகால பயணமானது CDB இன் பங்கு உரிமையாளர்களுடனான நீண்டகால உறவு மற்றும் அவர்களின்  விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்புக்கு வெகுமதியளித்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X