Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 நவம்பர் 19 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய பராலிம்பிக் குழு (NPC) மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினர் (MAS Holdings) ஆகியோர் கூட்டாக இணைந்து ஆசிய பரா விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவர்களை கெளரவிப்பு நிகழ்வு மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஹைவ் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்று முடிந்த 4 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை அணி 2 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது.
தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வென்ற நுவன் இந்திக்க, தங்கப் பதக்கம் வென்ற பிரதீப் சோமசிறி, வெள்ளிப் பதக்கம் வென்றவர்களான அமில பிரசன்ன, சமித்த துலான், ஜனனி விக்கிரமசிங்க, கெலினா பஸ்நாயக்க மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமன் சுபசிங்க, பாலித்த பண்டார, குமுது பிரியங்கிகா, நவீட் ரஹீம் ஆகியோர் மற்றும் பதக்கம் வென்றவர்களைத் தவிரவும், இப்போட்டியில் பங்கேற்றிருந்த ஏனைய 16 வீர,வீராங்கனைகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில், இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் உப தலைவர் பிரியந்த பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் அதிகாரிகள், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
19 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
59 minute ago