2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புத்தாக்கத்துக்காக SLT-MOBITEL க்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற Digital Transformation World Asia 2023, TM Forum Catalyst விருதுகள் வழங்கும் நிகழ்வில் ‘The Metaverse Experience: Re-inventing telco business - Phase II’ செயற்திட்டத்துக்காக ‘Best Innovation & Future Techco’ விருதைப் பெற்றுக் கொண்டது.

தொலைத்தொடர்பாடல் துறை, தொழிற்துறை நியமங்களுக்கான கொள்கை ஆதாரங்கள் மற்றும் நிலைபேறான இலக்குகளில் தாக்கம் ஆகியவற்றில் வெற்றிகரமான புத்தாக்கங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன்,

Digital Transformation Asia 2023 என்பது வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்திருப்பதுடன், தொழிற்துறையின் முன்னோடிகள், நிபுணர்கள் மற்றும் தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் துறைகளைச் சேர்ந்த பங்காளர்களை ஒன்றிணைத்து, புதிய போக்குகள், புத்தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு நடவடிக்கைகளில் சிறந்த செயன்முறைகள் பற்றி கலந்துரையாடுவதாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டை, டிஜிட்டல் மாற்றியமைப்பு மற்றும் வியாபார புத்தாக்கம் தொடர்பில் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு அங்கத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சர்வதேச தொழிற்துறை சம்மேளனமான TM Forum ஏற்பாடு செய்கின்றது. இந்த ஆண்டின் Digital Transformation World Asia 2023 நிகழ்வு தாய்லாந்தின், பாங்கொக் நகரில் மார்ச் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது.

மாநாட்டின் இறுதிநாளன்று, தொலைத்தொடர்பு துறையின் மாபெரும் சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வடிவமைக்கும் அங்கத்தவர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. கட்டமைக்கப்பட்ட, முறையான மற்றும் ஒன்றிணைந்த செயன்முறையினூடாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தப்படுவதுடன், புதிய தொழில்நுட்பங்களின் பிரயோகம் மற்றும் வளர்ந்து வரும் நியமங்கள் போன்றவற்றை உறுதி செய்வதாகவும் செயற்திட்டங்கள் அமைந்திருக்கும்.

TM Forum'இன் DTW Asia 2023 இன் சுயாதீன நடுவர் குழாமினால், நான்கு பிரிவுகளிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வியாபாரத் தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் சமூகத்தில் தாக்கம், சிறந்த வெளிப்படுத்தல் மற்றும் சிறந்த புத்தாக்கம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் போன்றன அவற்றில் அடங்கியுள்ளன.

‘Best Innovation & Future Techco’ விருதினூடாக, தொழிற்துறைக்கு டிஜிட்டல் மாற்றியமைப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய புத்தாக்கமான மற்றும் எதிர்கால நோக்குடைய தொழில்நுட்ப தீர்வு கௌரவிக்கப்பட்டிருந்தது.

SLT-MOBITEL உடன், China Unicom, China Mobile, CAICT ஆகியன இந்த விருதுக்காக போட்டியிட்டிருந்ததுடன், AsiaInfo, Whale Cloud மற்றும் Shenzhen Tianyuan-DIC ஆகியனவும் பங்கேற்றிருந்தன.

விருதை வென்ற செயற்திட்டமான ‘The Metaverse Experience: Re-inventing telco business - Phase II’ ஊடாக Metaverse இல் வாடிக்கையாளர் அனுபவத்தின் முன்னேற்றம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. metaverse storefront மற்றும் metaverse conference hall இல் பிரத்தியேகமான மாற்றியமைப்பு வசதிகளை வழங்குவதாக இந்தத் தீர்வு அமைந்துள்ளது. metaverse இல் வாடிக்கையாளர்களின் அவதார்களுக்கு பெறுமதி வாய்ந்த கட்டமைப்புகளை பயன்படுத்துவதை கட்டியெழுப்பும் வகையிலும் இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், Communications Service Provider (CSP) இனால், ஏற்கனவே காணப்படும் தயாரிப்புகளையும் சேவைகளையும் விற்பனை செய்வது மட்டுமன்றி, சிறந்த அனுபவத்துடன், தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

இணையம் மாற்றியமைக்கப்படுவதுடன், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட உலகையும், நிஜ அம்சங்களையும் வழங்கும் Metaverse என அறியப்படும் அம்சமாக மாறிய வண்ணமுள்ளது. எமது கற்பனைகளை வெளிப்படுத்தி, எமது வாழ்க்கையையும் வியாபாரங்களையும் மாற்றியமைக்கும் வகையில் Metaverse அமைந்துள்ளது.

இந்த விருதினூடாக, புதிய கொள்கைகள் மற்றும் புத்தாக்கங்களில் SLT-MOBITEL காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுவதுடன், அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். தொழிற்துறை மற்றும் தேசத்தில் துரித டிஜிட்டல் மயமாக்கலை பின்பற்றுவதற்கு பெருமளவு பங்களிப்பு வழங்குவதாக இந்த கௌரவிப்பு அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .