Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு - மாவட்ட செயலகம், போரதீவு பற்று பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப் பற்று பிரதேச சபையினது வழிகாட்டலுடனும், வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராம சேவகர் பிரிவில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட குளத்தின் கையளிப்பு வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் அனர்த்த அபாயக் குறைப்புத் திட்டத்தின் கீழ் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினரல் வழங்கப்பட்ட நிதி அணுசரணையுடனும், புனரமைக்கப்பட்ட இக்குளத்தின் ஊடாக 286 குடும்பங்கள் தங்கள் நாளாந்த நீருக்கான தேவைப்பாடுகளையும், வாழ்வாதாரத்துக்கானத் தேவைகளையும் நிறைவேற்றவுள்ளனர்.
இக்குளத்துக்கான புனரமைப்புச் செலவாக பாம் நிறுனமானது, ரூபாய். 675,870.00 ஐயும், மக்களின் பங்களிப்பாக ரூபாய் 349,717.00 ஐயும் கொண்டதாகும்.
வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவானது விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட பிரதேசம் என்பதுடன், மீன்பிடி மற்றும் ஏனைய தொழில்களிலும் ஈடுபடும் மக்களை அதிகம்கொண்டதாகும்.
இந்த நிகழ்வில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி மாவட்ட செலயக உதவித் திட்மிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.றியாஸ், உதவித் திட்மிடல் பணிப்பாளர் கே.சசிகுமார் மற்றும் ஏனைய அரச திணைக்கள அதிகாரிகள் பாம் பவுண்டேசன் நிறுனத் திட்ட முகாமையாளர் அருள் சக்தி, மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பாம் பவுண்டேசன் நிறுவனமானது மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை வெள்ளம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட 12,389 குடும்பங்களுக்கும், 46 பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீரிணைப்பை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து வழங்கியுள்ளது.
வடிகான்களை சுத்தப்படுத்தலினூடாக மாவட்டத்துக்கான அனர்த்தத்தைக் குறைத்தல், மரம் மீள் நடுகை, கிராம மட்டத்திலான அனர்த்த அபாயக் குழுக்களை வலுப்படுத்துதல், குளங்களைப் புனரமைத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago