S.Sekar / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 2 மில்லியன் பெறுமதியான ஆய்வுகூடத்திற்கு தேவையான இயந்திரம் ஒன்றினை முள்ளியவளை கொமர்ஷல் வங்கி கிளையினரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைக்கு மிகவும் முக்கிய தேவையான குறித்த இயந்திரம் கொமர்ஷல் வங்கி முள்ளிவயை கிளையின் சமூக பொறுப்பு நிதியத்திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் பெறுமதியான மையவிலக்கு சுழற்கி இயந்திரம் வழங்கும் நிகழ்வு அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்றது.
இதன்போது மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர்கள் மற்றும் கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையின் முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் ஊழியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மருத்துவமனை நிர்வாகத்தினரால் கொமர்ஷல் வங்கிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது மருத்துவமனையின் அபிவிருத்திகளோ இயந்திர கொள்வனவுக்கோ நிதிகள் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுவதில்லை நன்கொடையாளர்களின் அன்பளிப்புக்களையும் நிதி உதவிகளையும் வைத்து தற்போது மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கிவருவதாக மருத்துவமனை பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.
11 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago