Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டின் ‘லங்கா பே டெக்னொவேஷன்’ விருது வழங்கலில் ஐந்து விருதுகளை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளது. தேசிய கொடுப்பனவு வலையமைப்பில் பங்கேற்கும் ஒரு வங்கியாக அது வழங்கியுள்ள பங்களிப்புக்காகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
லங்கா பே இணையத்தள மேடையில் சிறந்த பெறுகையாளருக்கான தங்க விருது, இவ்வாண்டின் சிறந்த புத்தாக்க வங்கிக்கான வெள்ளி விருது, வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகளுக்கான சிறந்த வங்கி, வாடிக்கையாளர் வசதிகளுக்கான ஆண்டின் சிறந்த வங்கி, நிதிச் சேர்க்கைகளுக்கான ஆண்டின் சிறந்த வங்கி என்பனவற்றுக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
லங்கா பே இணைய மேடையில் சிறந்த பெறுகையாளருக்கான விருது இணையத்தள மேடையில் பெறுகைகளின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் என்பனவற்றுக்கான பல்வேறு கொடுப்பனவுத் தெரிவுகள், லங்கா பே யால் செயற்படுத்தப்படும் போது இலத்திரனியல் நிதிமாற்ற விசை (CEFTS) இல் இணைந்து கொள்வதற்கான தீவிர ஆர்வம் என்பனவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
ஆண்டின் சிறந்த புத்தாக்க வங்கி விருது CEFTS செயற்பாட்டில் உயர் சராசரியைப் பெற்றுக் கொண்டதற்கான அங்கிகாரமாக வழங்கப்பட்டது. இதற்காக (ATM செயற்பாடுகள், இணையத்தள மேடை, இணைய வங்கிச் சேவை, நடமாடும் பிரயோகங்கள்) என்பன கருத்திற் கொள்ளப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் கீழும் எட்டப்பட்ட செயற் தொகுதியும் கருத்திற் கொள்ளப்படும்.
2017ல் லங்கா பேயின் டெக்னோவேஷன் ஆரம்ப விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கி மூன்று விருதுகளை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago