Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முதலீட்டு சபையின் பங்களிப்பில் வட மாகாணத்தில் முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு முதலீட்டு சபையின் பங்களிப்புடன் வட மாகாணத்தில் 6 ஆடைத் தொழிற்சாலைகள் 8,000 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதுடன், இவற்றில் சுமார் 7,917 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக, 15 செயற்றிட்டங்கள் வெவ்வேறு துறைகளில் முதலிடப்பட்டுள்ளதுடன், இவற்றில் 837 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த முதலீடுகளின் பெறுமதி 16,293 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, 2 புதிய திட்டங்கள் வணிக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதுடன், 5 செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மேலும், 2 திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், 5 திட்டங்களுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளன.
ஆடைத் தொழிற்றுறையினூடாக இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பிரதேசத்துக்கு பெருமளவு வருகை தருகின்றமையை கவனத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
10 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
55 minute ago