2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விருந்தோம்பல் துறை மீட்சிக்கு SLT-MOBITEL ஆதரவு

S.Sekar   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டல் துறையினால், சுற்றுலாப் பயணிகளுக்கு வெகுமதியுடனான அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் தேவைகளை புரிந்து கொண்டு, SLT-MOBITEL Enterprise இனால் பரிபூரண தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் சிறந்த பக்கேஜ்கள் போன்றவற்றை விருந்தோம்பல் துறைக்கு வழங்கி, அதனூடாக தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.

துறைசார்ந்த நிறுவனங்களை தமது ஹோட்டல்களுக்கும் சொத்துகளுக்கும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி, சுற்றுலா வருகைகளை அதிகரிக்கச் செய்வதற்கு வலுவூட்டவும், cloud அடிப்படையிலான Check-In தீர்வை வழங்கி, நிறுவனங்களை தொலைவிலிருந்தும் கட்டுப்பாட்டில் பேணுவதற்கு உதவவும் முன்வந்துள்ளது.

Check-In வியாபார தீர்வில், ஒன்லைன் பிரயாண முகவர்கள் மற்றும் கொடுப்பனவு கேட்வே உடனான Booking Engine ஐ கொண்டுள்ளதுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நாட்காட்டியுடனான நாட்காட்டி முகாமைத்துவம் மற்றும் உடனுக்குடனான மெருகேற்றங்கள், கொடுப்பனவுகள் மற்றும் கட்டணப் பட்டியல் மாதிரிகள், செயற்பாடுகளை சுயமாக்கக் கூடிய Housekeeping மாதிரி, வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் தேவைகளை பின்தொடரக்கூடிய CRM செயற்பாடுகள் மற்றும் பெருவாரியான அறிக்கைகளை தயாரிக்கக்கூடிய வசதி போன்றன அடங்கியுள்ளன.

 

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், SLT-MOBITEL Enterprise இனால் அடுத்த தலைமுறை குரல், வலையமைப்பு, டேட்டா ஹோஸ்டிங் மற்றும் நிர்வகிப்பு சேவைகள் போன்றன one-stop-shop ஆக வழங்கப்படுவதுடன், விருந்தோம்பல் துறைக்கு மதிநுட்பமான தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டு, வேகமாக வளர்ச்சியடைய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

SLT-MOBITEL Enterprise இனால் குரல் சேவை வழங்கப்பட்டு, ஹோட்டல்களுக்கு தமது தொடர்பாடல் கட்டமைப்பை, பிரத்தியேகமான தொடர்பாடல் வட்டமாக மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது. பரந்தளவு நிலையான மற்றும் மொபைல் இணைப்புத் தீர்வினூடாக, சொத்துகளுக்கு தமது உள்ளக தொடர்பாடல்களை சௌகரியமாக எவ்விதமான தடங்கல்களுமின்றி முன்னெடுக்க உதவியாக அமைந்துள்ளது.

சகல தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு Unlimited Internet வசதியும் வழங்கப்படுகின்றது. விருந்தினர்களுக்கு ஒப்பற்ற இணைய சேவையை அணுகுவதற்கு Enterprise Wi-Fi வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல்களுக்கு டேட்டாவை டோக்கன் முறையில் வழங்கி நிர்வகிக்கும் வசதியையும் வழங்குகின்றது. மேலும் மேலதிக GB பக்கேஜ் ஊடாக, ஹோட்டல்களுக்கு தமது டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்த அல்லது தினசரி செயற்பாடுகளை முன்னெடுக்க ஆதரவளிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த களிப்பூட்டும் தெரிவுகளை வழங்கும் வகையில், PEO TV இனால் 15 இணைப்புகள் வரை ஒரே ஃபைபர் இணைப்பினூடாக வழங்கப்படுகின்றது. ஹோட்டல் PCகள் மற்றும் லப்டொப்களை அநாவசியமான சைபர் இடர்களிலிருந்து பாதுகாத்திடும் வகையில், SLT-MOBITEL Enterprise இனால் Kaspersky IP End point வழங்கப்படுகின்றது. பரந்தளவு பாதுகாப்பு தேவைகளுக்கு பொருத்தமான வகையில் Surveillance தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஹோட்டல் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு 24 x 7 நேரமும் பதிலளிக்க உதவும் வகையில் விசேடமான chatbot சேவையான Bizchat காணப்படுகின்றது. இதனூடாக, விருந்தினர்களுக்கு நாடு மற்றும் கவர்ச்சியம்சங்கள் பற்றிய உடனடி தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், தொழில்நுட்ப அடிப்படையிலமைந்த தீர்வான TeDi Alexa Smart Hub என்பதும் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .