2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஹெவ்லொக் சிட்டி மோல் அங்குரார்ப்பணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெவ்லொக் சிட்டி மோல் 2023 கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலமைந்த இந்த ஷொப்பிங் கட்டடத்தொகுதி நிகரற்ற ஷொப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கி, கொழும்பின் முக்கிய இடத்தில் மக்களுக்கு மிகப்பொருத்தமான ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது.

200,000 சதுர அடிக்கு மேல் பரந்து காணப்படும் ஹெவ்லொக் சிட்டி மோலில் ODEL, காகில்ஸ் ஃபுட் ஹோல், ஸ்கோப் சினிமாஸ், ஃபுட் ஸ்டுடியோ, கூல் பிளானட் மற்றும் அபான்ஸ் உள்ளிட்ட ஆறு முதன்மை விற்பனையகங்கள் உள்ளன. மேலும், 132 ஏனைய விற்பனை நிலையங்களும் இருப்பதோடு, அவை இணையற்ற ஃபேஷன் மற்றும் அணிகலன் தெரிவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மதிமயக்கும் உணவு மற்றும் பானங்கள், வசதி சேவைகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள், மற்றும் பரிசுகள் மற்றும் புதுமையான அம்சங்களைப் பெற்றுத் தருகின்றன.

உணவுப் பிரியர்களைப் பொறுத்தவரை ஹெவ்லொக் சிட்டி மோல் வழங்கும் தெரிவுகளை ஒரு சமையற்கலை சாகசப் பயணம் என்று சொல்லலாம். 30க்கு மேற்பட்ட விசேட உணவகங்கள், துரித சேவை இடங்கள், கஃபே, மற்றும் ஸ்போர்ட்ஸ் பார்கள் இணைந்து வழங்கும் உலகளாவிய உணவு வகைகள் மற்றும் உள்நாட்டு விருப்பத் தெரிவுகள் என அனைத்தும் கிடைக்கும் சிலிர்ப்பூட்டும் food court உடன் உங்களுக்குப் புதியதொரு அனுபவம் கிடைப்பது நிச்சயம்.

ஹெவ்லொக் சிட்டி மோல் தனது வியப்பூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களையும் வெளிப்படுத்த தயாராக உள்ளது. Wet & Wild Adventure Zone உங்களுக்கு திகிலூட்டி பரவசப்படுத்த இருப்பதோடு, Jungle Zone வழங்கும் சுவரேற்றம் மற்றும் நீர் சாகச விளையாட்டுகள், அத்துடன் Ocean Zone இனது பலதரப்பட்ட நீர் விளையாட்டு செயற்பாடுகள் என உங்கள் வயது எதுவானாலும் உங்களைக் கவர பல அம்சங்கள் இங்கு காத்திருக்கின்றன. கேமிங் ரசிகர்களைப் பரவசப்படுத்த இங்குள்ள முழுக் குடும்பத்துக்கும் ஏற்ற Augmented Reality மற்றும் Virtual Reality கேம்களை விளையாடி மகிழலாம்.

அடுத்த வருட ஆரம்பத்தில் திறக்கப்படவுள்ள ஹெவ்லொக் சிட்டி மோல் இனது 1000 இருக்கைகள் கொண்ட, ஆறு திரை மல்ட்டிபிளக்ஸ் ஆனது இலங்கையின் முதலாவது ஒரேயொரு முதற்தரமான பெரிய அளவு IMAX திரையரங்கம் ஆகும்.

ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சி இனது குழும நிறைவேற்று அதிகாரி / பணிப்பாளர் பிரவிர் சமரசிங்க குறிப்பிடும்போது 'நாம் அனைவரையும் ஹெவ்லொக் சிட்டி மோலுக்கு வரவேற்கின்றோம். எம்மை விசேடமானவர்களாக்கிடும் தனித்துவமான பல அம்சங்கள் இந்த மோலில் உண்டு, சிறப்பான உருவாக்கல் கோட்பாடு, மிகப் பொருத்தமான அளவு, மத்திய அமைவிடம், மற்றும் மிகக் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்கள் என்பவற்றை அதில் குறிப்பிடலாம். நாம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பல்வகையான மற்றும் பரவசமளிக்கும் ஷொப்பிங் இடங்கள், பொழுதுபோக்குத் தெரிவுகள் மற்றும் உணவக அனுபவங்களை வழங்கக் காத்திருக்கின்றோம். ஹெவ்லொக் சிட்டி மோல் முழுக் குடும்பத்தினருக்கும் சேவையளிக்கின்ற, ஒரு மகிழ்விடமாக இருந்து அதியுச்ச நவீன புறநகர் மோல் ஒன்றாக விரைவில் மாறும்' எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .