Editorial / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் தாராபுரன் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் 20,7000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக மன்னார் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், மட்டல்பாடு பிரதேசத்தில் உள்ள தரிசு நிலமொன்றில் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபரைக் கைது செய்ததன் பின்னர், மன்னார் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினால் குறித்த மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபருக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்து வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னார் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026