Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மே 05 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின், எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள அருவியாற்றில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல் போன இரு சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது சிபான் (வயது 26) மற்றும் முஹம்மது முபாஸ் (வயது 18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சகோதரர்கள் தங்களது குடும்ப சகிதம் உணவு சமைத்துக்கொண்டு திங்கட்கிழமை நண்பகல் நானாட்டான் பிரதேசத்திலுள்ள அருவியாற்றுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்களில் மூன்றாவது சகோதரர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த சகோதரன் ஆற்றில் அடித்துக்கொண்டு சென்றதை கண்ட மற்றைய சகோதரன் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் பாய்ந்த போது, இருவருமாக ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இரு சகோதரர்களும் காணாமல்போன சம்பவம் தொடர்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் பிரதேச மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், நண்பர்கள், பிரதேசவாசிகள், கடற்படையினர் கூட்டாக இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணிக்கு காணாமல் போன இரு சகோதரர்களின் சடலங்கள், சுமார் மூன்று மணித்தியாலயங்களுக்குப் பின்னர் மாலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட இருசடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago