Niroshini / 2021 நவம்பர் 21 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை, பாலமோட்டை பகுதியில், இன்று, உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள காணியொன்றை உழவியந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, வாடகைக்கு அமர்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, இரு சிறுவர்களில் ஒருவன் திடீர் என கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்துக்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளான்.
எனினும், உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் முன்னமே அவர் உயிரிழந்துவிட்டதாக, வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
24 minute ago
28 minute ago
41 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
41 minute ago
10 Nov 2025