2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி

George   / 2016 நவம்பர் 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொது வைத்தியசாலைக்கு இன்று காலை 8.30மணியளவில் வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தை செய்தி சேகரிக்க சென்ற தமிழ், சிங்கள உடகவியலாளர்களை, அங்குள்ள ஊழியர் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

புகைப்படக்கருவியுடன் உட்செல்ல அனுமதிக்காது, தகாத வார்த்தைகளல் ஏசியதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாயில், ஊடகவியலாளர்களை அனுமதிப்பது கிடையாது என்பதுடன் கேள்விகளுக்கு உரிய பதில் எவையும் வழங்கப்படுவதில்லை.

இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து, சுகாதாரஅமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு தெரிவிக்க உள்ளதாக வவுனியா மாவட்ட ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .