Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மகா வித்தியாலயம் போதிய வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது என்றும் இதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவ வேண்டும் என மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றாகவும் வடமாகாணத்தில் அதிக மாணவர்கள் தொகையை கொண்ட நான்காவது பாடசாலையாகவும் காணப்படும் ஒரு பாடசாலையாக கிளிநொச்சி மகா வித்தியாலயம் காணப்படுகின்றது.
இப்பாடசாலையில் தற்போது இரண்டாயிரத்து 680 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதேவேளை மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலையில் 990 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலைகள் இரண்டு ஒரே வளாகத்தில் இரு பிரிவுகளாக இயங்கி வருகின்றமையால் பெரும் இட நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே, குறித்த பாடசாலையின் ஆரம்பப்பிரிவிற்கு ஏற்கனவே நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட காணி தற்போது இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்;து வருகின்றது. இதில் மூன்று மாடிக்குரிய கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைப்பெற்றுக் கொண்டால் இட நெருக்கடிப்பிரச்சினை தீரும் என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு கடந்த 21ஆம் திகதி, விஜயம் செய்த எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடம் மேற்படி கோரிக்கையினை பாடசாலை அதிபர் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago