Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
ஏழாலை மேற்கு, சைவசன்மார்க்க வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கல்விக் கண்காட்சி, நேற்று (20) காலை ஆரம்பமாகியது.
குறித்த கண்காட்சி இன்றைய தினம் (21) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
வித்தியாசாலையின் அதிபர் கந்தசாமி கெங்காதரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், சுன்னாகம் மக்கள் வங்கி முகாமையாளர் சி. மோகனச்செல்வன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடா வெட்டி மேற்படி கண்காட்சியை சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த கண்காட்சியில், ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .