Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே, மன்னாருக்குக் காற்றாலைகள் எடுத்துச் செல்லப்படுவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.
மன்னாருக்குக் கொண்டு செல்லப்படும் காற்றாலைக்கான உபகரணங்களால், போக்குவரத்துக்கு பாதிப்புண்டா என்று வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரசபை அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை மின்சார சபையுடன் இணைந்து, காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள், வவுனியா - மன்னார் வீதியூடாக எடுத்து செல்லப்படுவதாக தெரிவித்தனர்.
இதற்கான அனுமதிகள் உள்ளிட்ட பொலிஸாரின் பாதுகாப்புகள் என்பன ஏற்கெனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு அற்ற நிலையிலேயே, இவை எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேசாலைப் பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படும் குறித்தக் காற்றாலைகளினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரம், இலங்கை மின்சார சபையினருக்கு வழங்கப்படும் என்றும் பல வெளிநாடுகளில் இவ்வாறு காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் இதனால் பல நன்மைகளும் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
எனினும் பேசாலைப்பகுதியில் பொருத்தப்படும் காற்றாலைகளால், சூழலுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்று, ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
36 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
47 minute ago