2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கிளிநொச்சி வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

Mayu   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்திற்குப் புறம்பான உறவினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கிளிநொச்சி இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வட்டிக்கச்சி பிரதேசங்களைச் சேர்ந்த 24, 33 மற்றும் 59 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X