Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால், வீடுகளுக்கான இலவச குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவை, செவ்வாய்க்கிழமை (16) உதயநகர், கிழக்கு, உதயநகர் மேற்கு, ஆனந்தபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
மேற்படி மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, உத்தியோத்தர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர்.
எனவே, புதிய நீர் இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள், விண்ணப்படிவத்தைப் பெற்று, வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை, கிளிநொச்சி, 155ஆம் கட்டை, ஏ9 வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் கையளிக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலக தொலைபேசி இலக்கமான 021-2283981 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025