Editorial / 2023 ஜூலை 26 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் புதன்கிழமை (26) ஈடுபட்டனர்.
கிளிநொச்சி - முழங்காவில் இரணைமாதா நகர்ப்பகுதியில் கடற்றொழில் குடும்பங்கள் செறிந்து வாழும் மையப்பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தமது பகுதியில் அமைக்க வேண்டாம் எனப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மதுபானசாலை அமையுமானால் தமது பிரதேசத்தில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் இது தொடர்பில் பொது அமைப்புக்கள் மீனவ சங்கம் என்பது இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாகப் பிரதேச செயலாளர் பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு மகஜர்களையும் வழங்கியுள்ளனர்.
48 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago