Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, டெங்கு நோய் காவியான நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொதுமக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாது தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010ஆம் ஆண்டிலேயே முதலாவது டெங்கு நோயாளி இனங்காணப்பட்டார். அதிலிருந்து ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வருடத்தில் ஒக்டோபரில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையானது முன்னெப்போதும் இல்லாத அளவில் சடுதியாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மாவட்ட மட்டத்தில் அது குறித்த விழிப்புணர்வு, தடுப்புச் செயற்பாடுகள் போதுமானளவு முன்னெடுக்கப்படாத நிலையில் இம்மாதம் டெங்குப் பரம்பல் மேலும் அதிகரித்து நவம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 35 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.
டெங்குக் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்தததை அடுத்தே மாவட்ட சுகாதாரத்துறையினர் திடீரென விழித்தெழுந்துள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, டெங்கு நோய் காவியான நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொது மக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாது தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago