Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
நேற்று மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள். (R)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago