Editorial / 2024 மார்ச் 11 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (10) குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றிருந்தனர்.
இதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026