Freelancer / 2023 மே 10 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்- வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட்வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த 07 மீனவர்களையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான், நேற்று (09) உத்தரவிட்டார்.
மன்னார் வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட் வெடி பொருட்களுடன் மன்னாரைச் சேர்ந்த 7 மீனவர்களை திங்கட்கிழமை (8) வங்காலை பிரதேச கடற்படை கைது செய்து மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ஊடாக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது மீனவர்களிடம் இருந்து இருந்து டைனமைட் வெடி பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
மீன்கள் அற்ற நிலையில் வெடி பொருட்கள் மட்டும் உடமையில் இருந்ததால் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வங்காலை பொலிஸார் விசாரணையின் பின் குறித்த மீனவர்களை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். (N)
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026