2025 மே 17, சனிக்கிழமை

நாட்டு துப்பாக்கியுடன் தந்தை, மகன் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுஞ்சுகுளம் கிராமத்தில்,   சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட  நாட்டு  துப்பாக்கியுடன் தந்தை, மகன் ஆகிய இருவரும் மடு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று (27) இரவு 10 மணியளவில், மடு பொலிஸார் குஞ்சுக்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, குறித்த சட்டவிரோத உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு  துப்பாக்கியுடன் 25 வயதுடைய  மகனும் 50 வயதுடைய  தந்தையும் கைதுசெய்யப்பட்டனர். 

கைதுசெய்யப்பட்ட இருவரும்,  மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .