Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மானிய உரத்துக்கான பணம், இதுவரை வழங்கப்படாததன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசு காலத்தில் மானிய உரம் வழங்கப்பட்டது. நல்லாட்சி அரசு உருவானதன் பின்னர் விவசாயிகளுக்கு உரம் வழங்காது அதனை பணமாக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், காலபோக நெற்செய்கை தொடங்கி ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கும் விவசாயிகள், இதன் காரணமாக உரிய காலத்தில் பசளையினை நெற்பயிருக்கு இடமுடியாதிருப்பதாகவும் விரைவாக பணம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமெனவும் படிவங்களை நிரப்புவதில் விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் பணத்தினையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களுடைய வங்கி கணக்குகளில் பணம் வைப்பலிடப்படுவது வழமையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago