2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதானம்

George   / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணி, அப்பகுதி மக்களினால் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  முழங்காவிலில் அமைந்துள்ள  மாவீரர் துயிலுமில்லத்தில்  குறித்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகணசபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் ஆகியோரும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் பற்றைக்களை அகற்றி மாவீரர்களுடைய கல்லறைகள் இருந்த இடங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்

கிளிநொச்சி மாட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில், நேற்றைய தினம் முதல் சிரமதானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .