Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 22 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வியாழக்கிழமை (21) பாடசாலைக்கு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்ததை தன்னுடைய சக தோழியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த தோழி, ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாத போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுடன்,
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .