Freelancer / 2023 மே 19 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் - 10இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, இன்றைய தினம் (19) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். R

5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026