Editorial / 2020 மே 22 , மு.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள், நேற்று (21) காலை முதல், சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, மன்னார் மாவட்டத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் டி.ரமேஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “தனியார் பஸ் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண, மாவட்டத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிகளுக்குத் தெரியப்படுத்தியமைக்கு அமைவாகவே, நேற்று (21) காலை முதல், தனியார் பஸ்கள், வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சேவைகளை ஆரம்பித்துள்ளன” என்றார்.
மேலும், வடக்கில் உள்ள இந்த மாவட்டங்களில் இருந்தும், மன்னாருக்கு பஸ்கள் வரவுள்ளனவெனவும், அவர் கூறினார்.
மன்னார் நகரசபை பணியாளர்களின் உதவியுடன், சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னரே சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும், ரமேஸ் தெரிவித்தார்.
4 minute ago
17 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
50 minute ago