Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“வன ரோப” நிகழ்ச்சி திட்டதின் கீழ், மன்னார் - மடு வட்டார வன அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “வன அரண ரெக்கவரண” மர நடுகை வேலைத்திட்டம், மன்னார் - வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், இன்று (01) அதிபர் எஸ்.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நிகழ்வில் கலந்துகொண்டு, தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான மரக்கன்றுகளை வழங்கினார்.
அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை வளாகத்தில், மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .