Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்
வட்டுக்கோட்டை - மூளாய் பிரதான வீதியில், நேற்று, நடந்து சென்று கொண்டிருந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கிளிநொச்சி - ஊற்றுபுலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்லப்பா (வயது 55) என்பவராவார்.
குறித்த நபர், மூளாய் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில், இரவு வேலை முடித்து நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கிய வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து, வீதியால் சென்றவர்கள் அவரை காப்பாற்றி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .