Niroshini / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில், இன்று (25), காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மன்னகண்டலை, கெருடமடு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
நேற்று (24) இரவு 9 மணியளவில், வீட்டில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற குறித்த நபர், வீட்டுக்கு திரும்பி வராத நிலையில், அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில், காட்டுபகுதியில் அவர் உயிருழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago