Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்,சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
வவுனியா புதிய பஸ் நிலையத்தில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் நடத்துனர் ஒருவருக்கும் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, வவுனியா மற்றும் முல்லைத்தீவில், இ.போ.சவினரால் இன்று (17), பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (16) இடம்பெற்ற மேற்படி முரண்பாட்டை அடுத்து ஏற்பட்ட கைகலப்பு காரணமாக, இ.போ.ச நடத்துனர் ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நடத்துனரை, தனியார் பஸ்ஸின் உரிமையாளரொருவரே தாக்கியதாகவும் அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே, இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 5.10 மணியளவில், யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைபற்று நோக்கிச் சென்ற களுவாஞ்சிக்குடி சாலைக்குச் சொந்தமான அரச பஸ், வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக தரித்து நின்றதுடன், புறப்படுவதற்கும் தயாரானது. இந்நிலையில், வவுனியா பஸ் நிலையத்தில் இருந்தும் அக்கரைபற்று நோக்கிப் புறப்பட, தனியார் பஸ் ஒன்றும் தயாராக இருந்தது.
இந்நிலையில், குறித்த இடத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்த போது, இரண்டு பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே, முரண்பாடு ஏற்பட்டதுடன், இரு பஸ்களும் மோதுண்டன. இதனால், தனியார் பஸ்ஸின் ஒருபக்கக் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனால், மேலும் குழப்பம் ஏற்பட்டு, கைகலப்பு வரைச் சென்றது. இந்தக் கைகலப்பின் போது, குறித்த தனியார் பஸ்ஸின் உரிமையாளர் மற்றும் நடத்துனர் தாக்கியதாக, இ.போ.ச பஸ்ஸின் நடத்துனர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்த இரு பஸ்களையும், பயணிகளுடன் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு முறைப்பாடுகளைப் பதிவு செய்துவிட்டு, பயணிகளை வேறு ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவைத்ததோடு, இ.போ.ச நடத்துனரைத் தாக்கியதாக, தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தால் தமக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி, வவுனியா சாலையின் இ.போ.ச பஸ்கள் சில, பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா சாலை இ.போ.சவினருக்கு ஆதரவாக, முல்லைத்தீவு சாலை ஊழியர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வடக்கில் உள்ள ஏனைய சாலையினரும், மாவட்டங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடாத நிலையில், அத்தியாவசியச் சேவை கருதி, உள்ளூர் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago