Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, குருமன்காடு பகுதியிலிருந்து ரயில் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சிறு வீதியால் திரும்ப முற்பட்ட சமயத்தில், அதே வீதியில் பின்புறமாக பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago