Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வூட்டும் அறிவிப்பு நடவடிக்கையில், முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த அறிவிப்பில் மக்கள் அதிகமான கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்குமாறும் சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும், அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வந்து நிப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, கொரோன தொற்று இல்லை என்பதை மருத்துவ அறிக்கை ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படாமல் இருப்பவர்கள் தண்டனை சட்டத்துக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு பிரதேசங்களில் இருந்து மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றும், முள்ளிவளை பொலிஸார் மக்களுக்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago