Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அன்பு மனைவி, இவ்வளவு சீக்கிரத்தில் தன்னையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, பிரிந்து விண்ணுலகம் செல்வாள் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மூத்தவனுக்கு வயது மூன்று; மற்றைய பெண் குழந்தைக்கு வயது ஒன்று.
என்னதான் அழுது அரற்றினாலும், உறவினர்கள் அவரை விட்டுவிடாமல் வற்புறுத்தி, ஓர் ஏழைப் பெண்ணை, இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைத்தனர்.
அவள் குழந்தையைப் பெற்ற தாயிலும் மேலாக, வளர்த்து வந்தாள். இவளுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்துவிட்டது.
காலம் உருண்டோடியது. மூத்த மகன் நல்ல தொழிலைத் தேடியதுதான் தாமதம், அந்த ஊரில் சட்டவிரோதமாகத் தொழில் செய்யும் ஒருவரின் மகளை நிச்சயம் செய்தபோது, கொதித்தெழுந்தாள். அவனோ வளர்த்த அன்னையை நோக்கி, “நீ யார்? என்னைப் பெற்றவளா? சும்மா குறுக்கே நிற்காதே” என கர்ஜனை செய்ய, வளர்ப்பு தாய் மௌனியானாள்; கட்டிய கணவன் சும்மா இருந்தான். மனமுடைந்து மரணப் படுக்கையில் விழுந்தாள். தனது மகனை அழைத்து “நீ எவரையும் வெறுக்காதே” என்றவள் கண் மூடினாள். ஈமக்கிரிகைகள் எல்லாம் முடிந்தன. அவளது மகன் சுடுகாட்டிலிருந்து புறப்பட்டான். எவரிடமும் சொல்லாமலேயே! இந்த வீட்டில் இனி என்ன இருக்கின்றது.
வாழ்வியல் தரிசனம் 25/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
37 minute ago
49 minute ago