2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘நீதியை வளைத்தால் நாடு அழிவை நோக்கி ஓடும்’

Editorial   / 2017 நவம்பர் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேச்சு உரிமை என்பது, இன்று அரசியல் தலைவர்களுக்கு மட்டும் உரியது போலுள்ளது. அதிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இந்த உரிமை இருப்பது சந்தேகம்தான். 

சாதாரணமானவர்கள் தங்களது உரிமைகள் எதுவெனத் தெரியாமல் இருக்கின்றார்கள். 

மிகவும் முன்னேற்றமடைந்த ஜனநாயக வல்லரசுகளின் தலைவர்கள், சின்னத்தப்புச் செய்தாலும் கூட, மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. எந்தவித அச்சமும் இன்றி, அந்தத் தப்புகளை விஸ்வரூபமாக்கி அவர்களது பதவிகளுக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். 

மன்னிக்க முடியாத தவறுகளைச் செய்யும் தலைவர்களைத் தண்டனை பெற வைக்க எவருமே பயப்படுவதுமில்லை. ஒரு நாடு சிறப்புற அமைய, நீதித்துறை வைராக்கியமான துணிச்சலும் இருக்க வேண்டும். நீதியை வளைக்க நினைத்தால் அந்த நாடு அழிவை நோக்கி ஓடும். 

     வாழ்வியல் தரிசனம் 28/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X