Princiya Dixci / 2016 ஜூலை 27 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இழக்கத் தயாரானவர்கள் அழவே மாட்டார்கள். எல்லாமே யதார்த்தம் - எதுவுமே எந்நேரத்திலும் நடக்கும் என்று மனமார உறுதியுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் எதிர்கொள்பவர்களுக்கு சோகம் என்பது பெரிதாகத் தாக்காது.
நாம் எல்லோருமே சமானியமான மனிதர்கள்தான். ஆசாபாசத்துடன் வாழ்ந்தே வருகின்றோம். எனவே எதனையும் சந்திக்கத் தயாராகும் நிலையினை உருவாக்குவது எளிதுமல்ல‚
ஆயினும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக சலனம், சஞ்சலத்தை விலக்கி வாழப் பழகவேண்டும். இதுவே எம்மைப் படிப்படியாக மாற்றியமைத்துப் பக்குவப்படுத்தி வைக்க உதவும்.
மனசு சாய்ந்திடும் பக்கம் சாய்தல் கூடாது. அறிவை ஸ்திரமாக்குதல் மேலானது. நிறைவான வாழ்விற்கு இதுவே வழி‚
வாழ்வியல் தரிசனம் 27/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .