Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தோஷத்திலும் நம்மவர்கள் கண்டதையும் உளறிக் கொட்டிவிடுவார்கள். ஏன் சோகத்தில் கூட, மற்றவர்கள் மீது பாய்வார்கள். எதனையும் எந்த உணர்வையும் அடிக்கி வைக்க முடியாது விட்டால், அவலப்படுவது யார்?
உறவுகளின் பிரிவும் எம் மீது நம்பிக்கை கொள்பவர்களும் எங்கள் வார்த்தைகளின் உஷ்ணத்தால் பஷ்மமாகக் கூடாது.
அழகு என்பது உடல் அழகு மட்டும் அல்ல. பேச்சின் அழகும் அதனுடன் இணைந்துள்ளது. நாகரீகம் என்பதுதான் என்ன? வாழும் வழி முறைதான் நாகரீகமாகும். இது பண்புடன் பிரிக்க முடியாத பிணைப்பாக ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் நிலையுணர்ந்து உரையாடுதல், அன்பு கலந்த பார்வையைச் செலுத்திவிட்டு சம்பாஷித்தல் சந்தோஷகரமானது.
பேச்சில் கௌரவத்தைக் காட்டாதவனுடன் சமூகத்தில் வேண்டாத பிரகிருதியாகின்றான்.
மமதைக் குணம் தொடர்பாடலுக்கு ஆகாது. அன்பான சொற்களுடன் கனிவும் சேர்ந்தால் எவரும் எங்கள் வசமாவார்கள்.
நெஞ்சத்தின் நெகிழ்ச்சி வார்த்தைகளில் இருந்தும் செய்யும் செயல் மூலம் பிரவாகிக்கின்றது.
வாழ்வியல் தரிசனம் 13/08/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 minute ago
11 minute ago
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
17 minute ago
25 minute ago